The Largest Tamil Christian's Global Network

 

Coming Soon!

 

Coming Soon!

 

Coming Soon!

  • Welcome to TamilChristian.com
  • Freely you have received, freely give. Matthew 10:8
  • ,ytrkha;g; ngw;wPh;fs;> ,ytrkha;f; nfhLq;fs;. kj;NjA 10:8


சர்வவல்லவராம் நம்தேவன் நமது வாழ்வில் செய்த ஒவ்வொன்றிற்காகவும் அவரை நன்றியுள்ள முழு இருதயத்தோடும் ஸ்தோத்தரிப்போம். அவர் நம்மேல்வைத்த அன்பு மகா பெரியது. அவர் நம்மேல் காட்டும் கிருபை என்றென்றைக்கும் மாறாதது.


நமது வாழ்க்கையில் எத்தனையோ விதமான சம்பவங்கள் நடந்து நம்மைக்கடந்து இந்த உலகத்தில் செல்லுகிறது. இவைகள் எல்லாவற்றிலும் நம்முடைய தேவன் எப்படி பாதுகாத்து நம்மை வழி நடத்துகின்றார். இவைகளினூடாக நாம் பெற்ற அனுபவம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை நமது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவர் காட்டும் வழியில் நாம் நடக்கும்போது நமக்குள் இருக்கும் நிறைவான சமாதானம், சந்தோஷம் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப்பற்றி சுருக்கமாக இந்தப்பக்கங்களில் எழுதி உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையின் சாட்சியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள், நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள். விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள், அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.


உங்கள் தாய் மொழியிலே உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சாட்சி பக்கம். அநேகருக்கு உகந்ததாகஇருக்குமென கர்த்தருக்குள் விசுவாசிக்கிறேன்.
இதில் நீங்கள் ஒவ்வொருவரும் கொடுக்கப்படும் சாட்சிகள் தேவநாமம் ஒன்றே மகிமைப்படும்படியாக அமையவேண்டும் சதாகாலங்களிலும் அவர் ஒருவருக்கே மகிமையும் துதியும் கனமும் உண்டாவதாக.

எந்தவிதத்திலும் தனிமனிதர்கள், சபைக்குழுக்கள் போன்ற புகழ்ச்சிக்குரியவைகள் தவிர்க்கப்படவேண்டும். அப்படி இவைகள் இடம்பெறுமாயின் அவைகளை இந்தப்பக்கங்களிலிருந்து எடுத்துவிடப்படும் என்பதை அறிவிக்கின்றோம். உங்கள் ஒவ்வொருவருடைய ஒத்துழைப்புக்காகவும் நன்றி.
Sign      View

Light of the World

Light of the WorldLight of the World
I am the light of the world. Whoever follows me will never walk in darkness, but will have the light of life. Jn.8:12
Add ChurchAdd Church
Churches in your area, Add a Church Location or Search for one near you.